நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட வெளி பகுதியை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினத்தை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவி ஒருவரை கேலி செய்ததாக முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுதொடர்பாக இரண்டு வகுப்பு மாணவர்களையும் கல்லூரி முதல்வர் அவரது அறையில் வைத்து கண்டித்துள்ளார். அப்போது இளங்கலை மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் பயிலாத நாகை செல்லூர் பகுதியைச் சேர்ந்த அரைக்கால் சட்டை, லுங்கி அணிந்துகொண்டு வந்த 50 பேர் கொண்ட கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர்.
நாகையில் துண்டு பிரசுரம் விநியோகித்த பெண்களின் ஆடையை பிடித்து இழுத்த பாஜகவினரால் பரபரப்பு
ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதை பொருட்படுத்தாத அந்த கும்பல் திடீரென கல்லூரி மாணவர்களை தாக்கத் தொடங்கினர். கல்லூரி மாணவர்களை வெளி பகுதியைச் சேர்ந்த கும்பல் உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபடும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மாணவர்களுக்கு இடையே கல்லூரிக்குள் நடந்து வரும் பிரச்சினையை கல்லூரி ஆசிரியர்கள் கண்டித்து கொண்டிருக்கும் வேளையில் வெளியில் இருந்து வந்த 50 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அனைவரும் மோடியால் பயனடைந்தவர்கள் தான் - வானதி விளக்கம்
இந்த தாக்குதலில் மாணவர்கள் ஐந்து பேர் படுகாயம் அடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.