நெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகையில் நடைபெற்ற மாரத்தான் விழிப்புணர்வு ஓட்ட போட்டியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
நெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாகையில் மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியினை, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஷாநவாஸ், நாகை மாலி ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கப்பட்ட மாரத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 7 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் சளைக்காமல் உற்சாகத்துடன் ஓடி வந்தனர்.
undefined
அசுர வேகத்தில் சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட காவல் அதிகாரி படுகாயம்
போட்டியில் பங்கேற்ற வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கைதட்டி அவர்களை வரவேற்று ஊக்கப்படுத்தினார். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும், பரிசு மற்றும் சான்றிதழ் கேடயங்களை அக்கரைப்பேட்டை ஜீவரத்தினம் நற்பணி மன்றத்தினர் வழங்கி பாராட்டினர்.