நாகை மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்காவை சட்டவிரோதாக கடத்தி சென்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
வேளாங்கண்ணி அருகே பாலாக்குறிச்சியில் காவல் சார்பு ஆய்வாளர் தலைமையில் நேற்று தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த மகாராஷ்டிர பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் 2 டன் அளவில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து லாரியில் இருந்த காவஸ்கர், பிரதீப் ஆகிய இருவரை பிடித்து காவல்துறையினர் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியதில், பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர்.
undefined
மேலும் படிக்க:நள்ளிரவில் விபத்துக்குள்ளான சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்..! பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு..
மேலும் இந்த குட்கா பொருட்களை தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய இருந்ததாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், ரு.50 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க:வைகை அணையிலிருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..