திருமணமான மறுநாளில் உடலில் காயங்களுடன் புதுமண பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான மறுநாளில் உடலில் காயங்களுடன் புதுமண பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் தொழுதுரைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும் திருவாரூர் மாவட்டம் பூத்தாநல்லுரைச் சேர்ந்த நளினி என்பவருக்கும் கடந்த 27ம் தேதி பெற்றோர் முன்னிலையில் தனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதில், மணப்பெண்ணுக்கு 12 சவரன் நகை, கட்டில், மெத்தை மற்றும் பீரோ உள்ளிட்ட சீர்வரிசை வழங்கப்பட்டன. இதனையடுத்து, புதுமண தம்பதியை வாழ்த்தி தொழுதூருக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப்படுகொலை.. சிதறிக் கிடந்த ரத்தம்.. நெஞ்சில் அடித்து கதறிய பெற்றோர்
திருமணம் நடந்த அன்றே முதலிரவுக்கு ராஜ்குமார் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து, சம்பிரதாய முறைப்படி மணப் பெண்ணை முதலிரவு அறைக்குள் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், மணம்பெண்ணுக்கு மாப்பிள்ளை பாலியல் தொந்தரவு கொடுத்து, மிருகத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் முதலிரவு நடைபெற்ற அறையில் இருந்து சத்தம் வரவே, திகைத்துப்போன உறவினர்கள் உள்ளே சென்று பார்த்த போது மணப்பெண் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதையும் படிங்க;- ரூ.23 லட்சம், 300 சவரன் நகை போட்டும் வரதட்சணை கொடுமை.. குடும்பத்தோடு அலேக்கா தூக்கிய மதுரை போலீஸ்..!
இந்நிலையில், உடம்பில் பல காயங்களுடன் இருந்ததாக சொல்லப்படும் புதுமணப் பெண் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாலியல் சீண்டலால் மகளுக்கு பல இடங்களில் காயம் இருப்பதாகவும், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புதுமாப்பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுப்பெண்ணின் தாயார் பரமேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதலிரவின் போது மணமகளை துன்புறுத்தியதாக மாப்பிள்ளை மீது திருமண பெண்ணின் தாயார் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.