கஞ்சா கடத்தல் கும்பலோடு காவலர் சீருடையில் பிரியாணி சாப்பிட்ட ஆய்வாளர்.. தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

By vinoth kumar  |  First Published Apr 25, 2022, 11:52 AM IST

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நாகை துறைமுகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 4 கோடி மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பொட்டலங்களை  பறிமுதல் செய்தனர்.

நாகையில் கஞ்சா கடத்தல் கும்பலோடு சொகுசு ஓட்டலில் காவலர் சீருடையில் பிரியாணி சாப்பிட்ட ஆய்வாளர் பெரியசாமி காத்திருப்பு பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா பொட்டலம் பறிமுதல்

Tap to resize

Latest Videos

undefined

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நாகை துறைமுகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 4 கோடி மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பொட்டலங்களை  பறிமுதல் செய்தனர்.

பிரியாணி சாப்பிட்ட ஆய்வாளர்

கடத்தலில் ஈடுபட்ட கஞ்சா வியாபாரி சிலம்பரசன் அவரது கூட்டாளிகள் 4 பேர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களின் செல்போனை ஆய்வு செய்தபோது தற்போதைய காவல் ஆய்வாளர் பெரியசாமியோடு அவர்கள் அடிக்கடி பேசிய தெரியவந்துள்ளது. மேலும், கஞ்சா வியாபாரி சிலம்பரசனுடன் ஆய்வாளர் பெரியசாமி சொகுசு விடுதி ஒன்றில் அமர்ந்து பிரியாணி சாப்பிடுவது போன்ற புகைப்படமும் இருந்தது. ஆனால், இந்த புகைப்படம் ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று பெரியசாமி விளக்கமளித்திருந்தார். 

காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

இந்நிலையில், கஞ்சா கடத்தல் கும்பலோடு காவலர் சீருடையில் பிரியாணி சாப்பிட்ட ஆய்வாளர் பெரியசாமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி அதிரடி உத்தரவிட்டுள்ளார். 

click me!