
மயிலாடுதுறையில் கிராம நிர்வாக அலுவலர் மூன்று இந்து, கிறிஸ்தவம், இஸ்லாமிய மத முறைப்படி திருமணம் செய்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்தவர் புருஷோத்தமன்(30). தரங்கம்பாடி அருகே சேத்தூர் விஏஓவாக உள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர் புவனேஸ்வரி(25). இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டை சேர்ந்த பெற்றோர் முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது புருஷோத்தமன் மூன்று மதங்களின் முறைப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தமது ஆசையை வீட்டில் கூறியிருக்கிறார். இதற்கு பெண் வீட்டார் தப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- இளம்பெண்ணுடன் தனிமையில் உல்லாசம்.. பேஸ்புக்கில் வெளியான வீடியோ.. இறுதியில் வாலிபர் என்ன செய்தார் தெரியுமா?
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள திருமண மண்டபத்தில் 26ம் தேதி மாலை இஸ்லாமிய முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும், 27ம் தேதி காலை இந்து முறைப்படியும் திருமணம் நடைபெறும் என ஒரே பத்திரிகையில் மூன்று முறைப்படியான விபரங்களுடன் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்படி திருமண மண்டபத்தில் நேற்று மாலை இஸ்லாமிய முறைப்படியான ஆடை, அலங்காரத்துடன் மணமேடையில் புருஷோத்துமனுக்கும் புவனேஸ்வரிக்கும் மயிலாடுதுறை பள்ளிவாசல் மவுலானா திருமணத்தை நடத்தி வைத்து ஆசீர்வதித்தார்.
பின்னர், கிறிஸ்தவ முறைப்படி ஆடை அலங்காரங்கள் மாற்றப்பட்டு கிறிஸ்தல போதகர் தலைமையில் மோதிரம் மாற்றி திருமணம் நடந்தது. நேற்று காலை அதே மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பாக மணமகன் கூறுகையில்;- எனக்கு முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்கள் அதிகம். சாதி, சமய வேறுபாடின்றி நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. வலி நிவாரணி மாத்திரைகளை கரைத்து உடலில் செலுத்தி தலைக்கேறிய போதையுடன் உல்லாசம்.!