இளம்பெண்ணுடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததை அவரே தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதோடு அந்த வீடியோவை நண்பர்கள் சிலருடம் காட்டியுள்ளார். 

ஈரோடு அருகே இளம்பெண்ணுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியானதால் திருமணம் ஆகாத இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உல்லாச வீடியோ வெளியானது 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (35). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இளம்பெண்ணுடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததை அவரே தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதோடு அந்த வீடியோவை நண்பர்கள் சிலருடம் காட்டியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுவண்ணா பெண்ணுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த வீடியோ முகநூலில் வெளியானது.

தற்கொலை

இதுப்பற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த பசுவண்ணா வெளியில் தலக்காட்ட முடியாமல் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது தோட்டத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பசுவண்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீஸ் விசாரணை

அதோடு, வீடியோ வெளியானதால் பசுவண்ணா தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பசுவண்ணா, பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோவை முகநூலில் பதிவிட்டது யார்? அவருக்கு அந்த வீடியோ எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க கணவர் எதிர்ப்பு.. வெறியில் இருந்த மனைவி.. அப்புறம் என்ன நடத்தது தெரியுமா?