நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
undefined
அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க;- பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய பள்ளி மாணவன்… நிலை தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ!!
இந்நிலையில், நாகைப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து நாகை மாவட்டத்தில் இனறும் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- மக்களே உஷார் !! 4 நாட்களுக்கு விடாது ஊற்றப் போகும் மழை.. இன்று 16 மாவட்டங்களில் கனமழை