கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வைத்த பிடிஆர்.. மனமகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என வாழ்த்தினார்.

By Ezhilarasan Babu  |  First Published Oct 13, 2022, 3:37 PM IST

மக்கள் நலன் சார்ந்த பண்புகளோடு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாக என சமுதாய வளைகாப்பு விழாவில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார். 


மக்கள் நலன் சார்ந்த பண்புகளோடு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாக என சமுதாய வளைகாப்பு விழாவில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார். 

மதுரை மாவட்டம், ஆரப்பாளையத்தில் உள்ள சிவபாக்கியா மஹாலில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்ததாவது:- 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்:  சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்..

மக்கள் நலன் சார்ந்த சிந்தனை, மனிதநேயம், இரக்கம் ஆகிய மூன்று பண்புகள் தலைசிறந்த தலைவர்களின் அடையாளமாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த 3 பண்புகளையும் முன்னிருத்தி பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை  செயல்படுத்தி வருகிறார்கள். ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் 3 திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். முதலாவதாக, கர்ப்பிணித் தாய்மார்கள் உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:   சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை... மேயர் பிரியாவை செல்லமாக கலாய்த்த ஜெயக்குமார்.

அவர்களுக்கு சரியான முறையில் ஊட்டச்சத்து கிடைப்பதால் பிறக்கின்ற குழந்தையும், கர்ப்பிணிகளும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். இரண்டாவதாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை சிறப்பாக செயல்படுத்தி, சிகிச்சை பெற வருபவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிப்பது. மூன்றாவதாக, முதன்மைக்கல்வியை அனைவருக்கும் சிறப்பான முறையில் கிடைக்கப்பெற செய்வதாகும். வளர்ச்சியை நோக்கி செல்லும் சமுதாயத்திற்கு, நாட்டிற்கு அடித்தளமாகவும், உட்கட்டமைப்பாகவும் அமையக்கூடிய திட்டமாக இந்த 3 திட்டங்களும் விளங்குகிறது.

பெண்கள் அவர்களது திருமண வயதிற்கு முன்பாக மிக இளம் வயதில் திருமணம் செய்வதால் அவர்களுக்குக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படும். கொரோனா காலக்கட்டத்தில் அதிகளவில் வளரிளம் பெண்கள் திருமணம் நடைபெற்றுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வேதனைக்குரிய செய்தியாகும். இத்தகைய பாதிப்புகளை குறைப்பதற்கு 2 திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். முதலாவதாக, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் உட்டச்சத்து பொருள்கள் சரியான திறன் கொண்டதாக உள்ளதா, சரியான முறையில் சென்று சேருகிறதா என்பதை ஆராய உள்ளோம். 

இரண்டாவதாக, கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல். இனி வரும் காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்களுக்காக அதிகமாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி மற்றும்மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்தார்.


 

click me!