மதுரை மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல் எதிரொலி; கத்தி, கம்பி பறிமுதல்

Published : Oct 09, 2022, 11:25 AM IST
மதுரை மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல் எதிரொலி; கத்தி, கம்பி பறிமுதல்

சுருக்கம்

மதுரை மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல் போக்கு ஏற்படும் சூழல் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறை வளாகத்தில் உள்ள கத்தி, கம்பி, கண்ணாடி உள்ளிட்ட ஆயுதங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.  

மதுரை மத்திய சிறையில்  நேற்று தண்டனை கைதிகள் வெள்ளைக்காளி தரப்பான ‘டோரி’ மாரி மற்றும் கச்ச நத்தம் கொலை வழக்கு சிறைவாசியான  கனீத்  தரப்பினர் இடையே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. 

இதில் இருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் இரு தரப்பினரும் வேறு வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டு கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தநிலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக மதுரை மத்திய சிறையின் 8வது எண் தளத்தில்  சிறை கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் தலைமையில் 100 காவலர்கள் சோதனையிட்டனர்.

உணவு தேடி வீட்டு கதவை தட்டிய காட்டு யானை; கதவை திறந்த உரிமையாளர் அதிர்ச்சி

இதில் ஆபத்து மற்றும் காயம் ஏற்படுத்தும் வகையில் இருந்த கத்தி, பீங்கான் தட்டுகள், இரும்பு வாளியின் கைப்பிடிகள், கம்பி, கண்ணாடிகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றை  பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் மோதலில் ஈடுபடாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சிறை வளாகத்தில் சிசிடிவி மூலமாகவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது.

ராணிபேட்டையில் பாத்திரத்தில் தலையை விட்டு மாட்டிக்கொண்ட குழந்தை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!