கழுத்தில் கயிற்றை சுற்றி விளையாடிய சிறுவன் கயிறு இறுகி பலி

Published : Oct 07, 2022, 11:46 AM ISTUpdated : Oct 07, 2022, 11:47 AM IST
கழுத்தில் கயிற்றை சுற்றி விளையாடிய சிறுவன் கயிறு இறுகி பலி

சுருக்கம்

மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் விசாகன் துணிகளை காய வைக்க பயன்படுத்தப்படும் கொடி கயிறு கழுத்தில் மாட்டிக் கொண்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் கூலித்தொழில் செய்து வருபவர் துரைப்பாண்டி, மனைவி லட்சுமி. இவர்களது ஒரே ஒரு மகனான விசாகன் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் தன் மகன் சுறுசுறுப்பாக இருந்ததோடு மட்டுமல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார். விளையாடிக் கொண்டுதானே இருக்கிறான் என்று சாதாரணமாக தாய் லட்சுமி தன் வீட்டின் முன்பாக பூ கட்டி கொண்டிருந்தார். 

மனைவின் நடத்தையில் சந்தேகம்; மகளை கொலை செய்த கொடூர தந்தை கைது

ஆனால் துணிகள் காயப்போடும் கொடி  கயிற்றைக் கழற்றி தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு விளையாட்டுத்தனமாக சுற்றியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தை நெருக்கியுள்ளது. கயிற்றை மீண்டும் அவிழ்ப்பதற்கு சிறுவன் முயற்சி செய்துள்ளான். ஆனால், பலன் அளிக்காத சூழ்நிலையில் சிறிய முனுங்கல் சத்தம் மட்டும் கேட்டுள்ளது. உடனடியாக உள்ளே சென்ற தாய் சத்தமிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியோடு மகனை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

நெல்லை மதுபோதையில் தகராறு செய்த ஊர்காவல் படை வீரர் இடை நீக்கம்

மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடல் கூராய்வு பணிக்காக அனுப்பி வைத்தனர். 10 வருடங்கள் கழித்து தனக்கு பிறந்த ஒரே ஒரு மகனையும் இழந்து விட்டு தவிக்கும் தாயைக் கண்டு அந்த பகுதியில் இருக்கும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் சோகத்தில்  மூழ்கினர். 

சிறுவன் விளையாடும் சில நிமிடங்களுக்கு முன்பாகத்தான் வெளியூரில் வேலை பார்க்கும் தன் தந்தையிடம் தீபாவளிக்கு என்னென்ன பட்டாசுகள் வேண்டும் என்று பட்டியலிட்டு கைபேசி மூலமாக கொடுத்துள்ளார் என்று தாய் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!