தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்கள்; மதுரை நீதிமன்றம் வேதனை!! 

Published : Sep 20, 2022, 06:33 PM IST
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்கள்; மதுரை நீதிமன்றம் வேதனை!! 

சுருக்கம்

தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில், அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்களை கணக்கிட்டால் அது, கணக்கீடு செய்யாத முடியாத அளவிற்கு இருக்கும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.  

தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில், அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்களை கணக்கிட்டால் அது, கணக்கீடு செய்யாத முடியாத அளவிற்கு இருக்கும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், "மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் திறக்கப்பட்டு ஆண்டுக்கு மேலாகியும் தமிழ் மொழி வளர்ப்புக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை. உலக தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !

அப்போது, மதுரை  தமிழ்ச்சங்கத்தின் துணை இயக்குநர் நேரில் ஆஜராகி, "தமிழ் சங்கத்தில் 26 ஆயிரத்து 35 நூல்கள் உள்ளன. பதிப்பிக்கும் நூலின் ஒரு நகலை, உலக தமிழ் சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் நூல்கள்  பெறப்பட்டுள்ளன. 2017 ல் நூலகத்தை அமைப்பதற்காக 6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. கடந்த 2018ல் அதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.  ஆனால் இதுவரை புத்தகங்களை வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை" என தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில், அட்டம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில், அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்களை கணக்கிட்டால் அது, கணக்கீடு செய்ய முடியாத  அளவில் இருக்கும் எனக் குறிப்பிட்டனர்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

மீண்டும் ஒரு விசாரணை கைதி மரணம்.. இதுதான் சமூக நீதியா ? திமுகவை வெளுத்து வாங்கிய சீமான் !

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!