நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு.. 2 பெண்களுக்கு ஜாமீன் வழங்கி.. ஒரு பெண்ணுக்கு ஆப்பு வைத்த நீதிபதி.!

By vinoth kumar  |  First Published Aug 26, 2022, 8:44 AM IST

கடந்த 13-ம் தேதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல்  தியாகராஜன் கார் மீது தாக்குதல் வழக்கில் கைதான பாஜகவை சேர்ந்த தனலட்சுமி மற்றும் தெய்வானை இருவருக்கும் ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சரண்யா என்பவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

காஷ்மீரில் வீர மரணமடைந்த மதுரை டி. புதுப்பட்டி லட்சுமணனின் உடலுக்கு கடந்த 13-ம் தேதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக  பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் பாலா, திருச்சியை சேர்ந்த கோபிநாத் திருச்சியை சேர்ந்த கோபிநாத், ஜெயகிருஷ்ணா, முகமது யாகூப், தனலட்சுமி, சரண்யா, தெய்வானை உள்ளிட்ட 9 பேரை அவனியாபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஆறுக்குட்டி போல பல குட்டிகள் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வருவார்கள்... ஆர்.எஸ்.பாரதி ஆருடம்!!

இதனையடுத்து, 9 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். கடந்த முறை ஜாமீன் வழக்கு விசாரணைக்கு 6 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், மீண்டும் ஜாமீன் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது தனலட்சுமி மற்றும் தெய்வானை இருவருக்கும் ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சரண்யா என்பவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரும் மறு உத்தரவு வரும் வரை சமையநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  கும்பகர்ணன் போல் தூங்கும் திமுக...! தட்டி எழுப்பும் அதிமுக...! எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு

click me!