மதுரையில் மனைவி, மகள், மகனை துடிதுடிக்க கொன்றுவிட்டு விவசாயி தற்கொலை முயற்சி.. என்ன காரணம் தெரியுமா?

Published : Aug 18, 2022, 12:03 PM ISTUpdated : Aug 18, 2022, 12:05 PM IST
மதுரையில் மனைவி, மகள், மகனை துடிதுடிக்க கொன்றுவிட்டு விவசாயி தற்கொலை முயற்சி.. என்ன காரணம் தெரியுமா?

சுருக்கம்

தாங்கள் குடும்பத்துடன் கடவுளிடம் செல்வதாக நண்பருக்கு செல்போனில் முருகன் கூறியதால் அவரது நண்பர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் சென்று பார்த்தபோது மனைவி மகள் மற்றும் மகன் ஆகிய மூன்று பேரும் கிணற்றிலிருந்து சடலமாக கிடந்தனர். 

மதுரை அருகே கடன் தொல்லையால் குடும்பத்தோடு கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி, மகன் மற்றும் மகள் உயிரிழந்த நிலையில் விவசாயி முருகன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

மதுரை மாவட்டம் பெரிய இலந்தை குலத்தைச் சேர்ந்த முருகன்(38) என்ற விவசாயி ஊமச்சிகுலம் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் கொய்யாத்தோப்பு ஒன்றினை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். இதனால், கொய்யா தோப்பில் உள்ள வீட்டில் தனது மனைவி சுரேகா (35), மகள் யோகிதா (16), மகன் மோகனன் (11) ஆகியோருடன் வசித்து வந்தார். 

இதையும் படிங்க;- தலைநகரை அடித்து தூக்கிய தூங்கா நகரம்.. ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை இத்தனை கோடியா?

மகள் லோகிதா மதுரையில் உள்ள மகளிர் பள்ளியில் 11-ம் வகுப்பும், சிறுவன் மோகனன் பாலமேட்டில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.  முருகன் பலரிடம் கடன் வாங்கி இருக்கிறார். அதனை திருப்பி செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாதததால் கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். இதனால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முருகன் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், முருகன் தனது மனைவி சுரைகா ( 35 ) , மகள் யோகிதா ( 16 ) , மகன் மோகனன் ( 11 ) ஆகிய மூன்று பேரை கொய்யா தோப்பில் உள்ள கிணற்று பகுதிக்கு அழைத்து சென்று 3 பேரையும் தள்ளிவிட்டுள்ளார். கிணற்றுக்குள் விழுந்த 3 பேரும் தண்ணீரில் மூழ்கி துடிதுடித்து உயிரிழந்தனர். அதன் பின்னர் முருகனும் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு  தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

தாங்கள் குடும்பத்துடன் கடவுளிடம் செல்வதாக நண்பருக்கு செல்போனில் முருகன் கூறியதால் அவரது நண்பர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் சென்று பார்த்தபோது மனைவி மகள் மற்றும் மகன் ஆகிய மூன்று பேரும் கிணற்றிலிருந்து சடலமாக கிடந்தனர். உயிருக்கு ஆபத்தான முறையில் கழுத்தை அறுத்துக் கொண்டு கிணற்றுக்குள் இறங்கி நின்று கொண்டிருந்த முருகனை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதையும் படிங்க;-  கரணம் அடிக்கும் போது கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

இது குறித்து அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!