சுதந்திர தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத மதுரை பகுதியில் உள்ள 158 கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.
உற்சாகமாக கொணாட்டப்பட்ட சுதந்திர தினம்
இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடு தோறும் கொடிகள் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து தேசிய விடுமுறை நாளான சுதந்திரதினத்தன்று கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படாமல், ஊழியா்கள் வேலை செய்ய வேண்டும் எனில், அவா்களுக்கு இரட்டிப்புச் சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்றுவிடுப்பு அளிக்க வேண்டும். இதன் விவரத்தை தொழிலாளா் ஆய்வாளா் அலுவலகத்தில் விடுமுறை தினத்திற்கு ஒரு நாள் முன்பாக உரிய படிவத்தில் சமா்ப்பிக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விதிகள் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து சுதந்திர தின நாளான நேற்றைய தினம் மதுரை மண்டல தொழிலாளா் இணை ஆணையா் பெ. சுப்பிரமணியன் அறிவுறுத்தல்படி தொழிலாளர்கள் நலத்துறையினர் சார்பில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உங்களுக்கு ஒரு நியாயம்...! ஊருக்கு ஒரு நியாயமா..? ஸ்டாலின் அரசு மீது பொங்கி எழுந்த அண்ணாமலை
எனக்கு வாய் நீளமா குறைவா என்பது பிறகு தெரியும்... ஜெயக்குமாரை அலறவிட்ட மா.சுப்பிரமணியன்
கடைகளுக்கு நோட்டீஸ்
அதன்படி மதுரை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி அரசு உத்தரவை மீறி செயல்பட்ட கடைகள், வணிகநிறுவனங்கள் என 158 நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு தொழிலாளர்கள் நலத்துறை சார்பில் உதவி ஆணையர் மைவிலிசெல்வி அபராதம் விதித்து உரிய விளக்கம் கோரி நோட்டிஸ் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மதுரை மண்டல தொழிலாளா் ஆணையத்திற்கு உட்பட்ட விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொழிலாளா் துறையினா் ஆய்வு மேற்கொண்டதில் 160 கடைகள் நிறுவனங்களுக்கும் நோட்டிஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்