மதுரையில் ரயில் மீது ஏறி விளையாடியபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ரயில் மீது ஏறி விளையாடியபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாம்பாள்புரம் அருகே முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் விக்னேஸ்வர் (17). கடந்த ஞாயிற்று கிழமை தனது இரண்டு நண்பர்களுடன் கூடல்நகர் ரயில் நிலையம் பகுதிக்கு விளையாட வந்துள்ளார். அப்போது கூடல் நகர் ரயில் நிலைய ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோச் எண்.14269 பயணிகள் ரயில் பெட்டியின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்சார வயர் மீது கை பட்டு தூக்கி கீழே வீசப்பட்டுள்ளார். இதனை கண்ட சக நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க;- சேலம் அரசுப்பள்ளியில் 2வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி.. என்ன காரணம் தெரியுமா?
இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த விக்கேஸ்வரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க;- உயிரிழந்த மகனை கட்டித்தழுவி அழுது.. அதே இடத்தில் மாரடைப்பால் துடிதுடித்து இறந்த தாய்.. செங்கல்பட்டில் சோகம்.!
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் பெட்டி மீது ஏறி செல்ஃபி எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி கலவரம்.. வன்முறையை துண்டியதாக அதிமுக ஐடிவிங் பிரிவைச் சேர்ந்தவர் அதிரடி கைது..!