புகார் கொடுக்க வந்த பெண்ணுடன் எஸ்ஐக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவர் மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன் அவர் எஸ்ஐயுடன் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.
புகார் கொடுக்க வந்த பெண்ணுடன் எஸ்ஐக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவர் மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன் அவர் எஸ்ஐயுடன் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.
மதுரை, எச்எம்எஸ் காலனியை சேர்ந்தவர் கணேசன்(34). ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத தம்பதிக்கு 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் கணேசன் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி ஆசைத்தீர பலமுறை பலாத்காரம்.. கர்ப்பமாக்கிய உறவினர் போக்சோவில் கைது.!
இதனிடையே, கணேசன் தற்கொலை சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினர். மேலும், இந்த தற்கொலையின் பின்னணியில் எஸ்.ஐ. ஒருவர் இருப்பதாக புகார் தெரிவித்தனர். இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. கணேசன் குடித்து விட்டு வந்து அடித்து கொடுமைப்படுத்துவதாக மனைவி அளித்த புகாரில், இவரை போலீசார் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பியிருந்தனர். இதற்கிடையில் எஸ்ஐ ஒருவருடன், மனைவிக்கு நெருக்கம் இருப்பதாக சந்தேகப்பட்ட கணேசன், கணேசன் தற்கொலை செய்தது தெரிய வந்தது. தற்கொலை செய்வதற்கு முன் கணேசன், எஸ்ஐ இருவரும் செல்போனில் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆடியோ விபரம் வருமாறு:
கணேசன்: வணக்கம் சார், புகார் கொடுக்க வந்த இடத்தில் இப்படி பண்ணலாமா?
எஸ்ஐ: பேசுவதில் என்ன தப்பு?.
கணேசன்: பேசுவதில் தப்பு இல்லை. ஆனால் பேசுகிற விஷயம் தப்பாக இருக்கிறதே?. நான் மது அருந்தி விட்டு அவளிடம் சண்டை போட்டேன். அது உண்மைதான். ஆனால் உங்களிடம் புகார் செய்யத்தானே அவள் வந்தாள். தயவு செய்து அவளுடன் தொடர்பை விட்டு விடுங்கள். என் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம். கையெடுத்து கும்பிடுகிறேன். இத்தோடு விட்டு விடுங்கள்.
எஸ்ஐ: இனிமேல் அப்படி நடக்காது. குடும்பத்தை சரியாக பார்த்துக் கொள்.
கணேசன்: புகார் கொடுக்க வந்தவளை நீங்கள் இப்படி பயன்படுத்தி இருக்கக் கூடாது. - இப்படி பேச்சு போய்க்கொண்டே இருக்கிறது. இப்படி அந்த ஆடியோ உள்ள நிலையில், அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க;- எனக்கு கொல்லி வைப்பனு பார்த்தேனே.. என்ன விட்டு போயிட்டியே ராசா.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத தாய்.!