தலைநகரை அடித்து தூக்கிய தூங்கா நகரம்.. ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை இத்தனை கோடியா?

By vinoth kumar  |  First Published Aug 16, 2022, 12:48 PM IST

டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14ல் தேதி மட்டும் ரூ.273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. அதிகபட்சமாக மதுரை ரூ.58.26 கோடி, சென்னை ரூ.55.77 கோடி, மதுபானம் விற்பனையாகியுள்ளது.


டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14ல் தேதி மட்டும் ரூ.273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. அதிகபட்சமாக மதுரை ரூ.58.26 கோடி, சென்னை ரூ.55.77 கோடி, மதுபானம் விற்பனையாகியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். இதையொட்டி, முந்தைய நாளே இரண்டு நாள்களுக்கு தேவையான மதுபானங்களை குடிமகன்கள் வாங்குவது வழக்கமான ஒன்றுதான். 

இதையும் படிங்க;- போதை இல்லா தமிழகம் சொன்னா மட்டும் போதாது செயலில் காட்டுங்கள் முதல்வரே.. விஜயகாந்த் அதிரடி சரவெடி..!

Latest Videos

undefined

இதனால் அன்றைய தினம் காலை முதலேயே டாஸ்மாக் கடைகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில், அன்றைய தினத்தில் எவ்வளவு ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது என கணக்கை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 14ம் தேதி மட்டும் ஒரே நாளில் ரூ.273.92 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இதில், மண்டல வாரியாக பார்க்கும் போது அதிகபட்சமாக  மதுரை ரூ.58.26 கோடி, சென்னை ரூ.55.77 கோடி, சேலம் ரூ.54.12 கோடி, திருச்சி ரூ.53.48 கோடி, கோலை ரூ.52.29 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- “468 மதுக்கடைகள் மூடல்.. அதிர்ச்சியில் குடிமகன்கள்” - அச்சச்சோ !

click me!