ஸ்ரீவில்லிபுத்தூர் இம்மானுவேல் சிலை; விருதுநகர் ஆட்சியருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை புதிய உத்தரவு!!

By Dinesh TGFirst Published Sep 20, 2022, 6:14 PM IST
Highlights

ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், அமைச்சியார்புரம் கிராமத்தில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் சிமெண்ட் சிலையை அகற்றி வெண்கல சிலை அமைக்க கோரிய வழக்கில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், அமைச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், அமைச்சியார்புரம் கிராமத்தில் 126 வீடுகள் உள்ளன. அதில், வசிக்கும் மக்கள் அனைவரும் தேவேந்திர குல வேள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்த கிராமத்தில் 1990ஆம் ஆண்டு இமானுவேல் சேகரன் அவர்களின் சிமெண்ட் சிலை அமைக்கப்பட்டு தற்போது வரை பூஜை செய்யப்பட்டு வருகிறது. 1997-ல் இமானுவேல் சேகரன் அவர்களின் சிமெண்ட் சிலை சேதமடைந்தது. இதனை சரி செய்ய அரசு ரூ. 2000 வழங்கியது.

தற்போது, இமானுவேல் சேகரன் அவர்களின் சிமெண்ட் சிலையை அகற்றி வெண்கல சிலை வைப்பதற்காக அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் மனு மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சியார்புரம் கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இல்லை.

தூத்துக்குடி சம்பவம்: தமிழக அரசு விசாரணை அறிக்கை ஏற்பு; வழக்குகள் முடித்து வைப்பு!!
 

எனவே, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், அமைச்சியார்புரம் கிராமத்தில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் சிமெண்ட் சிலையை அகற்றி வெண்கல சிலை அமைக்க உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

click me!