காவல் நிலையங்களில் அறிமுகமான “GREAT” திட்டம்; இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது

By Dinesh TGFirst Published Oct 10, 2022, 7:56 PM IST
Highlights

தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் GREAT என்ற திட்டத்தை மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார் தொடங்கி வைத்தார்.
 

காவல்நிலையம் என்றாலே பொதுமக்களிடம் ஒருவித அச்ச மனநிலை உள்ளதால் காவல் நிலையங்களுக்குள் நுழைவதற்கே தயங்குவர். மேலும் பொதுமக்கள் யாரிடம் புகார் மனு அளிப்பது, எப்படி அளிப்பது என்ற சந்தேகம் நாள்தோறும் காவல்நிலையங்களுக்கு வரக்கூடிய சாமனியர்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை களையும் விதமாகவும் பொதுமக்கள் காத்திருப்பை தவிர்க்கும் விதமாகவும், தமிழகத்திலயே முதன்முறையாக மதுரை மாநகர ஆணையர் அலுவலகத்தில் (Grievance Redressal And Tracking System) GREAT திட்டம் தொடங்கப்பட்டது. இதனை மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார் தொடங்கிவைத்தார்

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட 21காவல்நிலையங்கள் மற்றும் 4 மகளிர் காவல்நிலையங்கள் என 25 காவல் நிலையங்களில் எழுத்தர் அறை பகுதியில் கணிணியுடன் கூடிய வரவேற்பு அறை பகுதி உருவாக்கப்பட்டு அதற்கான வரவேற்பாளரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 

இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்த அமேசான்; மத்திய உள்துறைக்கு புகார் அனுப்பிய மதுரை வழக்கறிஞர்

இவர்கள் காவல்நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு நபரின் வருகைக்கான காரணம் குறித்த பெயர், தேதி, நேரம், மொபைல் எண், புகார் வகை, ஆதார் எண், காவல்நிலைய அதிகாரி உள்ளிட்டவற்றை வரவேற்பாளரிடம் கூறியவுடன் அதனை GREAT இணைய தளத்தில் பதிவிடப்படும். இந்த காவல்நிலைய வரவேற்பு அறை முன்பாக 360டிகிரியுடன் , ஆடியோ பதிவுடன் கூடிய சிசிடிவி கேமிரா பொறுத்தப்பட்டுள்ளது.

இந்த 25 கேமிராக்கள் முழுவதுமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் கண்காணிக்கப்படும். 

மேலும் அங்குள்ள வரவேற்பாளர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் அவர்களது தொலைபேசிக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள GREAT திட்ட காவலர்கள் புகார்தராரை தொடர்புகொண்டு புகார் தன்மை குறித்தும், வரவேற்பாளர்கள் மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டு அதனை பதிவுசெய்வார்கள்.

அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பியதால் நிலத்தை இழந்த விவசாயி கதறல்

இதனுடைய நிலைகள் குறித்து ஆணையருக்கு தெரிவிக்கப்படும் யாரேனும் மனுவை பெறுவதில் தாமதம் ஏற்படுத்தினாலோ, புகார்தாரரிடம் அத்துமீறி நடந்துகொண்டாலோ அந்த காவல்துறையினரின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மீதான பொதுமக்களின் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும்

இதன் மூலமாக பொதுமக்கள் நல்லமுறையில் நடத்தபடுவதை உறுதிசெய்யவும், அவர்களது குறைகளை விரைவாக தீர்க்கவும், பொதுமக்கள் காவல் நிலையத்தில் வெகு நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், இவற்றை கண்காணிக்கவும் காவல்நிலையத்தின் மீதான அச்சத்தையும் போக்கும். பொதுமக்கள் இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்பினால் 0452-2520760 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். 

மதுரை மாநகர காவல்துறையின் இந்த திட்டமானது காவல்நிலையங்களின் செயல்பாடுகளை முழுவதுமாக கண்காணிக்கும் பிக்பாஸ் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பதே நிதர்சனம்.

 

click me!