கண்ணகிக்கு ஒற்றை சிலம்பு; எனக்கு ஒற்றை செங்கல் - மதுரையில் உதயநிதி பேச்சு

By Velmurugan s  |  First Published Feb 7, 2023, 10:57 AM IST

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய அரசு வாயில் வடை சுடுகிறது எனவும், 2024 சட்டமன்ற தேர்தலின் போதும் அதே செங்கல்லை மீண்டும் தூக்க வேண்டிய நிலை வரும் என்றும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கும் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திவ்ய தர்ஷினி, ஆட்சியர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "இவ்வளவு பெரிய தாய்மார்கள் கூட்டத்தை இவ்வளவு எழுச்சியுடன் எங்குமே பார்த்து இல்லை. கண்ணகி ஒற்றை சிலம்பை வைத்து நீதி கேட்டது போல், ஒற்றை செங்கல்லை வைத்து நான் நீதி கேட்க காரணமாக இருந்தது இந்த மண் தான். தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற அந்த ஒற்றை செங்கல் மதுரையில் எடுத்தது தான்.

Tap to resize

Latest Videos

undefined

கழக ஆட்சி அமையும் போதெல்லாம் மதுரையின் வாழ்வாதாரம் உயர்ந்து கொண்டே போகிறது. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 75% வாக்குறுதிகள் நிறைவு பெற்றுள்ளன. செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்காதது தான் எங்கள் பிரச்சனை. அதற்கு முன்பாகவே எதிர்கட்சிகள் அதைப்பற்றிய தவறான பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து விடுகிறார்கள்.

ஆனால், கடந்த அதிமுக ஆட்சி பல லட்சம் கோடி கடனையும், அடிமை அரசு என்ற அவப்பெயரையும் தான் விட்டுச்சென்றது. திமுக ஆட்சி அமைந்த பின்னர் செயல்படுத்திய பல திட்டங்கள் பெரும் பயன் அளித்துள்ளன. தமிழகம் முழுவதும் மகளிருக்கான இலவச பேருந்து சேவை மூலம் 220 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுமைப்பெண் திட்டம் மூலம் 1.16 லட்சம் மாணவிகளும், மக்களை தேடி மருத்துவம் மூலம் 1 கோடி மக்களும், காலை உணவு திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் குழந்தைகளும் பயனடைந்து உள்ளனர்.

மது போதையில் காட்டு யானைகளுடன் மல்லுக்கட்டும் வாகன ஓட்டிகள்

2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் இன்னும் துவங்கவில்லை. ஆனால், 2021ல் அடிக்கல் நாட்டப்பட்ட கலைஞர் நினைவு நூலக கட்டுமானம் நிறைவுற்று திறப்புக்கு தயாராகி விட்டது. செயல்படும் அரசுக்கும், வாயில் வடை சுடும் அரசுக்கும் இது தான் வித்தியாசம். இந்த பட்ஜெட்டில் கூட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை. இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அதே செங்கல்லை தான் தூக்க வேண்டிய நிலை வரும்.

தலையில் மண்ணை போட்டுக்கொண்டு கெத்தாக காட்டுக்குள் சென்ற மக்னா யானை

மதுரை மக்கள் அத்தனை பேரும் செங்கல்லை கையில் எடுக்கும் முன் நிதி ஒதுக்கி கட்டுமான பணிகளை தொடங்குங்கள். மக்கள் எல்.ஐ.சி.யில் முதலீடு செய்த பணம் காணாமல் போகிறது, சமையல் எரிவாயு மானியம் கிடைக்கவில்லை. இதையெல்லாம் கேட்பதற்கு எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் உங்களை சந்திக்க வருவதில்லை. ஆனால், திமுக அரசு மக்களுடனே இருக்கிறது, இருக்கும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு துணை நிற்கும். உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து உங்களுக்காக உழைப்பேன்" என தெரிவித்தார்.

click me!