தலையில் மண்ணை போட்டுக்கொண்டு கெத்தாக காட்டுக்குள் சென்ற மக்னா யானை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் பிடிபட்ட மக்னா காட்டு யானையை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பாக விட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான சீரியம்பட்டி, ஈச்சம்பள்ளம், சோமனஹல்லி, பாப்பரம்பட்டி, காட்டம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விலை நிலங்களில் இரண்டு காட்டு யானைகள் புகுந்து கரும்பு, ராகி, சோளம், நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்தன. மக்களை அச்சப்படுத்தி பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தர்மபுரியில் மனித கழிவுகளை வெறும் கைகளால் அள்ள வைத்து பேரூராட்சி தலைவர் அட்டூழியம்
இதை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாப்பாரப்பட்டி பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. கும்கியின் துணையோடு யானைகளை பிடிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். நேற்று முன் தினம் பாப்பாரப்பட்டி அருகே பெரியூர் ஈச்சம்பள்ளம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு யானைகளில் ஒரு யானைக்கு மயக்கம் ஊசி செலுத்தினர்.
இதில் மயக்கமடைந்த யானையை கும்கி யானை உதவியுடன் வனத்துறைக்கு சொந்தமான லாரியில் ஏற்றி ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. பிடிப்பட்டது மக்னா யானை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வரகளி யாரு வனப்பகுதியில் இன்று காலை விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே வனப்பகுதியில் இருந்து வெளியேறி டாப்ஸ்லிப் பரம்பிக்குளம் சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து வருவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
கோவையில் 21 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்; ஒருவர் கைது