
சேலத்தைச் சேர்ந்த குணசீலன் (வயது 26) என்ற இளைஞர் மதுரை அண்ணா நகர் அடுத்த சாத்தமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம் ஒன்றில் தங்கியிருந்த பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாத காலமாக ஆன்லைன் ரம்மி எனப்படும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தொடக்கத்தில் ஆன்லைன் ரம்மி மூலம் பணம் சம்பாதிக்கத் தொடங்கிய குணசீலன் தொடர்ந்து அந்த விளையாட்டிற்கு அடிமையாகி தொடர்ச்சியாக விளையாடி வந்துள்ளார். பின்னர் சிறிது சிறிதாக தாம் பணத்தை இழப்பதை உணர்ந்துள்ளார். இருப்பினும் இழந்த பணத்தை மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் விளையாட்டில் ஆர்வம் காட்டி பல லட்சங்களை இழந்துள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் இன்று திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குணசீலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின் இணைப்புடன் பொய்யாக இணைக்கப்படும் ஆதார் எண்கள்; வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழக்கும் இளைஞர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். அண்மையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காமல் அதனை நிராகரித்தார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் ஒவ்வொரு தற்கொலைக்கும் ஆளுநர் தான் பொறுப்பு என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.
மகளுடன் தாய் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: விருதுநகரில் பரபரப்பு