பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய மு.க.அழகிரி

By Velmurugan s  |  First Published Jan 31, 2023, 12:49 PM IST

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது பிறந்த நாளை பண்ணை வீட்டில் வைத்து ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்.


முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தனது பிறந்த நாளை முன்னிட்டு விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார். அவரது ஆதரவாளர்கள் மு.க. அழகிரிக்கு சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய ஓமலூர், சேலம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்

Tap to resize

Latest Videos

undefined

முக அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தனது பிறந்தநாளை பொது வெளியில் கொண்டாடாமல் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மு க அழகிரியை வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயா அழகிரி ஆகியோர் இணைந்து இருப்பது  போன்ற போஸ்டர்களை ஒட்டி அதன் மூலமாக மு.க.அழகிரிக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கோவில்பட்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி, 15 தொழிலாளர்கள் காயம்

இதே போன்று பல்வேறு பகுதிகளிலும் அழகிரியின் ஆதரவாளர்கள் மு.க. அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். திமுகவில் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்தவித செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் இருந்த அழகிரி ஆதரவாளர்கள் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் மு க அழகிரி சந்திப்பை தொடர்ந்து போஸ்டர் மூலமாக தங்களது பணிகளை தொடங்கியுள்ளதோடு அழகிரியின் பிறந்தநாளையும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

click me!