மதுரையில் இருந்து சென்னைக்கு பறந்த இதயம்; 2 மணி நேர திக் திக் பயணம்

By Velmurugan s  |  First Published Jan 25, 2023, 9:57 AM IST

மதுரையில் மூளைச்சாவடைந்த 32 வயது பெண்ணின் இதயம் 2 மணி நேரத்திலேயே சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மற்றொரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.


மதுரையைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் சாலை விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பெண் திடீரென மூளைச்சாவடைந்தார். நோயாளி மூளைச்சாவடைந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். 

நாங்கள் யார் என்பது இடைத்தேர்தல் மூலம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை! அப்படினா இபிஎஸ்க்கு ஆதரவா? அண்ணாமலை

Tap to resize

Latest Videos

undefined

அதன்படி, சென்னை அபோலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மற்றொரு நோயாளிக்கு அப்பெண்ணின் இதயம் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறைக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு சிறிய ரக விமானத்தில் இதயம் 1.45 நிமிடங்களில் கொண்டு வரப்பட்டது, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனைக்கு 15 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் மூலம் இதயம் கொண்டு செல்லப்பட்டது.

ஜெயலலிதா பயன்படுத்திய பட்டுச் சேலைகள், ஆபரணங்கள் ஏலம்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சரியாக இரண்டு மணி நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டு, நோயாளிக்கு பொருத்தப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறைக்கும், இதயத்தை எடுத்துவர உதவியாக இருந்த மற்ற நபர்களுக்கும் நன்றி தெரிவித்தது.

click me!