தொடர் மழையினால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. முழ்கிய தரைப்பாலம்.. 10 கிராம மக்கள் தவிப்பு..

By Thanalakshmi VFirst Published Nov 3, 2022, 5:04 PM IST
Highlights

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகே தொடர் மழையினால் தரைப்பாலம் முழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.  
 

வடகிழக்கு பருமழையை யொட்டி, தொடர் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தால் முழ்கியது. இதனால் அதனை நம்பி இருந்த, குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தற்போது அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க:மக்களே உஷார் !! சென்னையில் நாளைக்கு அடித்து ஊற்றுமா மழை..? சுட சுட வெளிவந்த வெதர் அப்டேட்..

அதுமட்டுமின்றி இங்குள்ள மக்கள் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த தரைபாலத்தை தான் பயன்படுத்தி வந்தனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் 10 கிமீ சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இதுக்குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஒவ்வொரு மழைக்காலத்தில் இதே நிலையை தான் ஏற்படுகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் படிக்க:வெளுத்து வாங்கும் மழை.. கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. கும்பக்கரை அருவில் குளிக்க தடை..

click me!