பிரபல கேளிக்கை விடுதியில் பயங்கரம்.. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

Published : Oct 21, 2022, 01:33 PM IST
பிரபல கேளிக்கை விடுதியில் பயங்கரம்.. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

சுருக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே  சத்தியன் கிராண்ட் ரெஸ்சார்ட்டில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் 50,000 லிட்டர் கொள்ளவு கொண்ட கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக 3 வாலிபர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் உள்ளே இறங்கி உள்ளனர். 

ஸ்ரீபெரும்புதூர் அருகே சத்தியன் கிராண்ட் ரெஸ்சார்டில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே  சத்யன் கிராண்ட் ரெசார்ட்டில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் 50,000 லிட்டர் கொள்ளவு கொண்ட கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக 3 வாலிபர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் உள்ளே இறங்கி உள்ளனர். அப்போது, விஷவாயு தாக்கியதில் 3 பேரும் கழிவுநீர் தொட்டியில் மயங்கி விழுந்துள்ளனர். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனே போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போலீசார் உதவியுடன் நீண்ட நேரம் போராடி கழிவுநீர் தொட்டியில் மயங்கி கிடந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

 ஆனால் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்