விபத்தில் உயிரிழந்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர்.. வானதி சீனிவாசன் கண்ணீர் மல்க அஞ்சலி...

By Ramya s  |  First Published Apr 26, 2024, 8:32 PM IST

விபத்தில் உயிரிழந்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் நரேஷ் குமார் உடலுக்கு அக்கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 


நேற்று  மாதம்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் நரேஷ் குமார் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட. மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றபட்டது.  நரேஷ்குமார் உயிரிழந்த தகவலை அடுத்து பிரேத பரிசோதனை அறையின் முன்பு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் திரண்டனர். 

Tap to resize

Latest Videos

undefined

பொய் புகார் அளிக்க மறுத்ததால் பெண் அதிகாரி மீது திமுக நிர்வாகி கொடூர தாக்குதல்- ஸ்டாலினை விளாசும் அண்ணாமலை

இதனிடையே பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நரேஷ் குமாரின் உறவினர்களை சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். பின்னர் நரேஷ் குமார் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த நரேஷ்குமாரின் உறவினர்கள் வானதியை சூழ்ந்து கதறி அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூற முடியாமல் வானதி ஸ்ரீனிவாசன் கண்ணீர் விட்டு அழுதார். 

சொத்துக்காக பாக்ஸிங்கில் குத்துவது போல தந்தையின் முகத்தில் கொடூர தாக்குதல்! பகீர் வீடியோ! வசமாக சிக்கிய மகன்!

பின்னர் நரேஷ்குமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஒரே நேரத்தில் கிளம்பியதால் அந்த சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்த பின், வாகனங்களை  அனுப்பினர்.

click me!