திமுக தலைவர் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான் தேர்தல் முடிவு - கணபதி ராஜ்குமார்

By Velmurugan s  |  First Published Jun 4, 2024, 9:22 PM IST

திமுக தலைவர் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான் தேர்தலில் வெளிப்பட்டுள்ளதாக கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை மக்களவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்கு என்னும் மையமான ஜிசிடி கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, தற்போது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் உள்ளோம். முடிவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். முதலமைச்சரின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்ததுதான் இந்த அடையாளங்கள்.

Coimbatore Constituency: சொல்லி அடித்த திமுக; கோவையில் 500 பேருக்கு ஆடு பிரியாணி வழங்கி கொண்டாட்டம்

Tap to resize

Latest Videos

undefined

குறிப்பாக ஜிஎஸ்டி பிரச்சினையால்  தொழிற்சாலைகள் இங்கு நலிவடைந்துள்ளன. இதனால் இங்குள்ளவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. அதனுடைய பதில் தான் இந்த தீர்ப்பு. முதலமைச்சருக்கு தான் இந்த பெருமை அனைத்தும். முதலமைச்சர் தமிழக மக்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தி கொடுப்பார்.

கோவை மிகப்பெரிய தொழில் நகரம். தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் எங்களுக்கு வாக்களித்தது மீண்டும் பழைய கோவை அடையாளங்களை பெற எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் எதிர்பார்த்தபடி மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். பாஜகவின் வளர்ச்சியை காட்டுவதை விட, அதிமுகவின் செயல்பாடு தான் காட்டுகிறது.

மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன்; வாடிய முகத்தோடு வெளியேறிய நயினார் நாகேந்திரன்

தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணிக்கு வெற்றி. ஜிஎஸ்டி பிரச்சினை, சிறுகுறு தொழிற்சாலை பிரச்சனை, விமான நிலைய விரிவாக்கம், ரயில் நிலையம் உள்ளிட்டவை சீர் அமைப்பதோடு மக்கள் என்ன எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்களோ அதை சீரமைத்து தருவோம் என தெரிவித்தார்.

click me!