கோவையில் திமுக வெற்றியை கொண்டாடும் விதமாக 500 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இதனிடையே திமுக முன்னிலை வகுத்து வருவதையொட்டி கோவை மாநகர திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் கோட்டைமேடு பகுதியில் பொது மக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கி வருகிறார்.
குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக, பாஜக இடையே கடுமையான வார்த்தை போர் நடைபெற்றது. அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஆடு என்று மறைமுகமாக குறிப்பிட்டு வந்த திமுகவினர், தேர்தல் நிறைவடைந்ததும் ஆட்டை வெட்டி பிரியாணி போடுவோம் என தெரிவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது மட்டன் பிரியாணி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
undefined
மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன்; வாடிய முகத்தோடு வெளியேறிய நயினார் நாகேந்திரன்
பொதுவாக கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டை என்ற வரலாற்று பெயர் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பெருவாரியான பகுதிகளில் முடிவுகள் அதிமுகவுக்கு எதிராக வந்தபோதிலும், கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு சாதகமான முடிவுகளே கிட்டும். அதன்படி தான் கடந்த அதிமுக ஆட்சியில் கொங்கு மண்டலத்தில் இருந்து வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பல அமைச்சர்கள் அங்கிருந்து தேர்வு செய்யப்பட்டனர்.
Durai Vaiko: மக்களே எஜமானர்கள்; வெற்றி முகத்தில் துரைவைகோ பேட்டி
ஆனால் தற்போது திமுக கோவையில் கிட்டதட்ட வெற்றியை உறுதி செய்துள்ள நிலையில், தமக்கு நேரடியாக சவால் விட்ட பாஜகவையும் வெற்றி பெற்றுள்ளது, அதே போன்று கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை என்று தெரிவித்து வந்த அதிமுகவையும் வீழ்த்தியுள்ளது.