நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு காரணம் கலைஞர் தான் - அமைச்சர் ராஜா பேச்சு

By Velmurugan s  |  First Published Jun 3, 2024, 4:52 PM IST

நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்படுகின்றது என்றால் அதற்கு காரணம் கலைஞர் தான் கோவையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பின்பு அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்.


முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் டிஆர்பி.ராஜா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்  டிஆர்பி ராஜா, 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும். 

கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஒட்டுமொத்த தமிழகமும் கலைஞரை கொண்டாடி வருகிறது. கலைஞரின் திருவுருவ படத்திற்கு  மலர் தூவி அவருக்கு மரியாதை செலுத்தினோம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு, இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுகிறது என்றால் அதற்கு முதல் காரணம் கலைஞர் அவர்கள் தான். 

Tap to resize

Latest Videos

யாரோ ஒருவரின் கட்டளையின் படி கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன - அமைச்சர் அதிருப்தி

ஒட்டு மொத்த இந்திய அரசியலிலும் வெற்றியை மட்டுமே கண்ட தலைவர் கலைஞர். இன்றைய நாளில் அவரை  கொண்டாடி வருகிறோம். முதலமைச்சர் தமிழகத்திற்கு மூன்றே ஆண்டுகளில்  மகத்தான சாதனைகள், மகத்தான நலத்திட்டங்களை பொது மக்களுக்கு, தாய்மார்களுக்கு, இளைஞர்களுக்கு அற்புதமான நலத்திட்டங்களை கொடுத்து வருகிறார்.

கட்சியவே கலைச்சிட்டேன் என் மனைவி எப்படியாவது எம்.பி. ஆயிடனும்; கையில் வேப்பிலையுடன் சரத்குமார் அங்கபிரதட்சணம்

மகத்தான வெற்றியை நாளை நாற்பது தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் பதிவு செய்யும். இதனை மக்கள் கொடுப்பார்கள். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் மகத்தான வளர்ச்சியை அனைத்து துறைகளிலும் முதலமைச்சர் செய்து காட்டுவார். கோவைக்கு தேர்தல் வாக்குறுதி செய்தது போல, மிகப் பெரிய வளர்ச்சி,  சிறு குறு தொழில்களில் பெரிய விடியல் அடுத்த கட்டமாக காத்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் இதுவரை கண்டிராத திட்டங்கள் வரும் என தெரிவித்தார்.

click me!