கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி அளவில் கோ பூஜை செய்து நடை திறக்கப்பட்டது. மேலும் 16 துறவங்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. முன் மண்டபத்தில் கற்பக விருட்சக வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள்மிகு சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் முன்பண்டவத்தில் காட்சியளித்தார்.
பிரபல ரவுடியை வீட்டிற்குள் புகுந்து கொலை செய்த மர்ம கும்பல்..! தூத்துக்குடியில் பரபரப்பு
undefined
அதைத்தொடர்ந்து சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு சேவல் சின்னம் பொறிக்கப்பட்ட சேவல் கொடி கோவிலை சுற்றிவர மேள தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி காலை 7 .15 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அப்பொழுது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணை பிளக்கும் அளவிற்கு கேட்டது. மேலும் தேருக்கு முகூர்த்தங்கள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஆபாச படங்களை வைத்து பெண்களை மிரட்டிய சிறுவன்.. இன்ஸ்டாகிராம் காதல் - அதிர்ச்சி சம்பவம் !
இன்று முதல் தினமும் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறும் அது தொடர்ந்து காலை மாலை என யாகம் நடைபெற உள்ளது. சிறப்பாக செய்து வருகிறது. வரும் சனிக்கிழமை அன்று காலை நடைபெற உள்ள தைப்பூசி திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து உள்ள நிலையில் , அதற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.