கோவை பீளமேடு அருகே லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் தனக்கு கோவை குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொள்பவர்களை என்ஐஏ விசாரணை செய்யும் எனவும் கூறி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு அருகே லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் தனக்கு கோவை குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொள்பவர்களை என்ஐஏ விசாரணை செய்யும் எனவும் கூறி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு அருகே உள்ள எஸ்.ஓ., பங்க் பகுதியில் அமேசான் டிரேடர்ஸ் என்று நிறுவனத்தை விஜய் என்ற கார்த்திக் கந்தசாமி என்பவர் நடத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சராக பதவியேற்ற உதயநிதி.! வாழ்த்து சொல்வது போல் மறைமுகமாக விமர்சித்தாரா இளையராஜா..?
undefined
இவர் 50க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் முதலீடு செய்வதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து கார்த்திக் கந்தசாமியால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும் மோசடி செய்த கார்த்திக் கந்தசாமி தற்போது பணத்தை தர முடியாது என்றும் உங்கள் பணத்தை கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு அனுப்பி இருந்தோம் என்றும் கூறிதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கலனா என்ன நடக்கும்? அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு தகவல்..!
மேலும் கார் வெடிப்பில் தொடர்புடையவர்களுடன் தொடர்பு இருப்பதால் தன்னை தேசிய புலனாய்வு முகமை விசாரணை வளையத்திற்குள் வைக்கும் என்றும் தன்னை தொடர்பு கொண்டால் அவர்களையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்றும் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அச்சமடைந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்று தங்களுக்கு பணத்தை காவல்துறை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்து அதற்கான மனுவையும் அளித்தனர்.