கோவை கார் குண்டு வெடிப்பு விவகாரம்... 10 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு என்.ஐ.ஏ மனுதாக்கல்!!

By Narendran SFirst Published Dec 14, 2022, 11:05 PM IST
Highlights

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் 10 நாட்கள் போலீஸ் காவல்கேட்டு என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் 10 நாட்கள் போலீஸ் காவல்கேட்டு என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கோவையில் கடந்த அக்.23 ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக முகமது அசாருதீன், அப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் என ஆறு பேரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஈஷாவை கல்வி நிறுவனமாக தான் கருதமுடியும்... மாசு கட்டுப்பாட்டு வாரிய நோட்டீஸை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!!

இதனிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. இதை அடுத்து கைது செய்யப்பட்ட ஆறு பேரும் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். இதை தொடர்ந்து இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர்களின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு… பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் நடவடிக்கை!!

இந்த நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பாக முகமது தவ்பிக், உமர் பாரூக் மற்றும் பெரோஸ் கான் உள்ளிட்ட மேலும் மூவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுத்தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 நபர்களில் 5 பேரை மட்டும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நீதிமன்றத்தில் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

click me!