கோவை சிங்காநல்லூர் உப்பிலி பாளையம், ஆர்.வி.எல்நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சங்கர் (29). சென்னையில் என்ஜினீயராக வேலை செய்து வந்த சங்கர் கடந்த வாரம் தனது வேலையை ரிசைன் செய்துவிட்டு கோவை திரும்பினார்.
கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த மென்பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கோவை சிங்காநல்லூர் உப்பிலி பாளையம், ஆர்.வி.எல்நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சங்கர் (29). சென்னையில் என்ஜினீயராக வேலை செய்து வந்த சங்கர் கடந்த வாரம் தனது வேலையை ரிசைன் செய்துவிட்டு கோவை திரும்பினார். சங்கருக்கு பல மாதங்களாக ஆன்லைன் சூதாட்டம் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் கிட்டத்தட்ட பத்து லட்சம் வரை பணத்தை இழந்த சங்கர் கடன் தொல்லையால் அவதி பட்டுவந்தார்.
undefined
இதையும் படிங்க;- எனக்கு ஓட்டு போட சொல்றேன்! போட மாட்டிக்கிறாங்க! நான் சொல்லி ரம்மி மட்டும் விளையாடிடுவாங்களா?சரத்குமார் ஆதங்கம்
இந்நிலையில் சம்பவந்தன்று கோவை ராம்நகர் சாஸ்திரி சாலையி்ல் உள்ள சுபஸ்ரீ ஹோட்டலுக்கு சென்ற சங்கர் அங்கிருந்த மேலாளர் சிவதாசனிடம் மீட்டிங் நடத்த அறை வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து சிவதாசன் அறை ஒதுக்க சாவியை பெற்றுக்கொண்டு சென்ற சங்கர் அடுத்த நாள் ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மேலாளர் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறையின் கதவை மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தனர்.
அப்போது அந்த அறையில் சங்கர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சுபஸ்ரீ ஓட்டல் மேலாளர் சிவதாசன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சங்கர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சோதனை செய்த போது, சங்கர் எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாகவும், அதிக அளவு கடன் உள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி வைத்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யலன்னா.. பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதை தடுக்க முடியாது.. அலறும் அன்புமணி