பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ச்சியாக காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மக்கள் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும் என கோவை மருத்துவக்கல்லூரி முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா பருவ மழை காரணமாக வரும் காய்ச்சல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தற்போது பருவ மழையால் காய்ச்சல் வருகிறது. அதே நேரத்தில் கோவை அரசு மருத்துவமனையில் அதிகமான காய்ச்சல் நோயாளிகள் வருவதாக கூற முடியவில்லை. எப்போதும் வருவதை விட ஒன்று இரண்டு சதவிகிதம் வேண்டுமானால் அதிகமாக வரலாம். அவர் இந்த பருவ காலத்தில் காய்ச்சல் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு.
அதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற சமயங்களில் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என மருத்துவர் அவர்களுக்கும் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் கூறினார். மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர், பாக்டீரியா, வைரஸ் உட்பட பிற காரணங்களாலும் காய்ச்சல் வரலாம். முதலில் அது எந்த வகை காய்ச்சல் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சாதாரணமாக காய்ச்சல் என்று வந்தால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகிவிட வேண்டும். எதிர்ப்பு சக்தியால் வரும் காய்ச்சல் என்றால் பயப்படத் தேவையில்லை. கிருமிகளால் காய்ச்சல் ஏதேனும் வந்தால் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் தெளிவா இருக்காங்க; தேவை இல்லாமல் அவர்களை குழப்ப வேண்டாம் - உதயநிதி மீது பிரேமலதா பாய்ச்சல்
காய்ச்சல் வந்தால் கஞ்சி, இளநீர், மோர் போன்ற நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கோவை அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலை பொறுத்தவரை சாதாரணமாக 60 பேர் புற நோயாளிகளாக வருகின்றனர். அவர்களை கண்காணிக்க மருத்துவர்களும் உள்ளனர். மக்கள் எப்போதும் நீரை கொதிக்க வைத்து பருகுங்கள். மழையில் அதிகமாக வெளியில் செல்வதை தவிருங்கள் எனவும் அறிவுறுத்தினார்.