கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பரவலாக இடைவிடாமல் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை முழுவதும் லேசான மேகமூட்டம் காணப்பட்டது. இதையடுத்து, நேற்றிரவு இரவு பத்து மணி அளவில் கனமழை துவங்கியது.
undefined
விடிய விடிய தொடர்ந்து கன மழை பெய்ததால் மாநகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடஞ்சல் ஏற்பட்டுள்ளது.
கோவையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை; பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சேவை பாதிப்பு
சாலை எது, மழை நீர் எது என்று தெரியாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இருப்பதால், கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனால் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வருவதால் தொடர் மழையால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மக்களும் கடைகளுக்கு செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது.