தமிழக முதல்வரிடம் பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும்; காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை

By Velmurugan s  |  First Published Apr 4, 2024, 11:46 AM IST

பிரதமர் நரேந்திர மோடி, ஒரு ஆட்சி எப்படி நடைபெற வேண்டும் என்பதை தமிழக முதல்வரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.


கோவை கணபதியில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்,  கோவை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் எழுச்சியோடு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். 

ஆர் எஸ் எஸ் என்ற பாசிச அமைப்பு வருவதற்கு முன்பு இந்த தேசம் அமைதி பூங்காவாக இருந்தது. எங்கெல்லாம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் போகிறதோ, அதனுடைய முகமூடியாக இருக்கிற பாஜக செல்கிறதோ அங்கெல்லாம் மதக் கலவரம் நடக்கும். அங்கு எல்லாம் சாதி கலவரம் நடக்கும். அமைதி பூங்காவான தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற துடித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? இன்னும் பாசிச விஷத்தை விதைப்பவர்கள் யார்? ஜனநாயகம் வெல்ல வேண்டும். பாசிசம் அழிய வேண்டும் அதற்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 

Tap to resize

Latest Videos

நீங்க மட்டும் தான் பல மொழி பேசுவீங்களா? எனக்கும் தெரியும்பா... இந்தியில் வாக்கு சேகரித்த அண்ணாமலை

மோடி பத்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதி என்னென்ன? ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 15 லட்சம்,  இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, பெட்ரோல் - டீசல் விலை பாதியாக குறைப்பு, நிகரான பொருளாதாரமாக மாற்றுவேன். சிலிண்டர் விலை 420 ரூபாய்யிலிருந்து,  பாதியாக குறைப்பார் என கூறினார்கள். அதை செய்ய முடியவில்லையே என  மன்னிப்பு கேட்கிறோம் என  என்றாவது சொன்னார்களா? ஆனால் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை இரண்டு ஆண்டுகளில் 80 சதவீத விழுக்காடு நிறைவேற்றி இருக்கிறார். 

ஒரு மன்னன், ஒரு அரசன் எப்படி வாழ்ந்தான் என்று சங்க இலக்கியத்தில் நாம் படித்திருக்கிறோம். மக்களுடைய மனசாட்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்படி மக்கள் மனசாட்சியாக வாழ்கின்றவர் நம்முடைய முதல்வர். ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் ஒரு வருடம் கொரோனா பெரும் தொற்று அதை சமாளித்தார்.  நூறாண்டுகள் காணாத மழை வெள்ளப்பெருக்கு, அதையும் சமாளித்தார். இதற்கு இடையிலே ஆட்சி பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஒப்படைக்கும் பொழுது கஜானா காலி, நிதி மேலாண்மை தெரியாது. மோடி அவர்களே நீங்க நேராக வந்து எங்க முதலமைச்சர் தளபதி கிட்ட வந்து ஒரு ஆட்சி எப்படி இருக்கணும் ஒரு ஆட்சி எப்படி நடக்குனுனு  கத்துக்குங்க என்றவர். 

ஒரே மேடையில் நேருக்கு நேர் விவசாயம் பற்றி விவாதிக்க தயாரா.? ஸ்டாலினுக்கு சவால் விடுத்த எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டு உரிமையை பறிப்பதற்கு துணை போனவர் எடப்பாடி. எடப்பாடியிடமும்,  மோடியிடமும்  ஏமாந்து விடக்கூடாது. இந்த நாட்டை காப்பாற்றுகின்ற பொறுமை, பெருமை அனைத்து மக்களுக்கு இருக்கிறது. இந்த 18வது மக்களவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல்..  மோடியுடைய  நண்பர் அதானி  10 ஆண்டுகளுக்கு முன்பு பணக்காரராக இருந்தார். இப்போது,  உலக அளவில, மோடி ஆட்சியில் 13வது இடத்தில் இருக்கிறார். எங்கு பார்த்தாலும் போதை பொருள் கிடைப்பதாக விமர்சித்தார்.

click me!