கோவையில் திமுகவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டுச் சென்ற பெண் நிர்வாகிகளை குடும்ப பெண்கள் சிலர் அடுக்கடுக்கான கேள்விகளால் திணறடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவை மசக்காளிபாளையம் பகுதியில் திமுகவினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மோடி, அமித்ஷா என்ற மோசமான சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் - திருமாவளவன் பேச்சு
அப்போது கோவை மசக்காளிபாளையம் பகுதியில் பெண் ஒருவர் வீட்டில் திமுகவினர் வாக்கு சேகரிக்க சென்ற போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொத்துவரி, மின்சார கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை உயர்த்தி பொதுமக்களை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டதாக அந்த பெண் திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கடந்த 45 நாட்களாக எங்கள் பகுதியில் குடிநீர் வரவில்லை. அப்போதெல்லாம் வராத நீங்கள் இப்போது மட்டும் எப்படி வாக்கு கேட்டு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக ஒரு வாஷிங் மெஷின் ஊழல்வாதிகளை கட்சியில் சேர்த்து தூய்மையாக்கிவிடுவார்கள்; பிடிஆர் விமர்சனம்
அப்பெண்ணின் தொடர் கேள்விகளால் திமுக கவுன்சிலர், அவருடன் வந்திருந்த திமுக பெண் நிர்வாகிகள் பதில் அளிக்க முடியாமல் வாயடைத்து நின்றார். தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படவே உடன் வந்த பெண்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இச்சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு பெண் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டள்ள நிலையில், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.