மோடி மீண்டும் பிரதமரானதும் வள்ளி கும்மி ஆட்டத்திற்கு பாரம்பரிய அங்கீகாரம் வழங்கப்படும் - அண்ணாமலை வாக்குறுதி

By Velmurugan s  |  First Published Apr 3, 2024, 10:53 AM IST

மத்தியில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று, மோடி பிரதமராகும் போது வள்ளி கும்மி ஆட்டத்திற்கு உரிய பாரம்பரிய அங்கீகாரம் வழங்கப்படும் என பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Latest Videos

undefined

அப்போது அவர் பேசுகையில், முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு பிரதமரை பலப்படுத்த போகின்றோம். பிரதமர் வலிமையாக வந்து அமரும்போது கோவையும் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லும். பாராளுமன்ற உறுப்பினர், மோடி இருக்கும் கட்சியை சார்ந்த உறுப்பினர் கோவையில்  இருக்க வேண்டும். எனவே உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் தாமரைக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும். 

நீங்கள் வாயால் சுடும் வடைகள் எங்கள் பசியை போக்குவதில்லை; திருச்சியில் மத்திய அரசை வசைபாடிய கமல்ஹாசன்

வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. சீவக சிந்தாமணியில் பேசப்பட்ட கலை வள்ளி கும்மி. அயோத்தியில் ராமர் கோவில் திறக்கும் போதும் வள்ளி கும்மி நடனம் ஆடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று நாங்கள் ஒரு உறுதி கொடுக்கின்றோம். 2024ல் பிரதமர் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளிக்கு கும்மி என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும். பாரம்பரியான கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும். 

பிரச்சாரத்துக்கு மத்தியில் பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்திய திருமாவளவன்!

அப்படி கொடுக்கும் பொழுது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும். கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் கோவையில் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை எனவும் மேயர் உள்ளிட்ட பதவிகள் டம்மியாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

click me!