மூளை ஆபரேஷன் முடிந்து கோவை திரும்பிய சத்குரு ஜக்கி! காருக்கு பூ போட்டு வரவேற்பு!

By SG Balan  |  First Published Apr 1, 2024, 8:59 PM IST

மூளையில் ரத்தக்கசிவு மற்றும் வீக்கம் காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜக்கி வாசுதேவுக்கு மார்ச் 17ஆம் தேதி அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.


சத்குரு ஜக்கி வாசுதேவ் டெல்லியில் அவசர மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கோவை ஈஷா யோகா மையத்திற்கு திரும்பியுள்ளார்.

ஈஷா யோகா மையத்தின் நுழைவாயிலில் ஆவலுடன் காத்திருந்த பழங்குடியினரும் உள்ளூர் கிராம மக்களும் கோவை திரும்பிய சத்குருவுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தனர். ஈஷா யோகா மையத்தின் உள்ளே, தன்னார்வலர்கள் சத்குருவை அன்புடன் வரவேற்றனர்.

Tap to resize

Latest Videos

முன்னதாக, மூளையில் ரத்தக்கசிவு மற்றும் வீக்கம் காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜக்கி வாசுதேவுக்கு மார்ச் 17ஆம் தேதி அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

உயர் அழுத்த மின்கம்பிகளுக்குக் கீழ் நின்று போன் பேசினால் மொபைல் வழியாக மின்சாரம் பாயுமா?

மார்ச் 20ஆம் தேதி சத்குருவின் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ பதிவின்படி, "சத்குரு நான்கு வாரங்களாக, கடுமையான தலைவலியைப் பொருட்படுத்தாமல் மஹாசிவராத்திரி நிகழ்ச்சிகளுக்கான பணிகளை இடைவிடாமல் செய்திருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மார்ச் 15 அன்று, MRI ஸ்கேன் எடுத்தபோது மூளையில் அதிக ரத்தப்போக்கு இருப்பது தெரிந்தது.

இருப்பினும், சத்குரு வலிநிவாரணிகள் மற்றும் மயக்க மருந்துகளை எடுத்துக்கொண்டதன் விளைவாக அவர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகளில் திட்டமிட்டபடி பங்கேற்றார். எந்த நிகழ்ச்சியையும் ரத்து செய்ய மறுத்துவிட்டார்.

மார்ச் 17ஆம் தேதி காலை சத்குருவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவரது மூளையில் உயிருக்கு ஆபத்தான அளவுக்கு வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அன்றைய தினமே அவசர அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஜிமெயிலுக்கு 20 வயசு! அதிரடி மாற்றங்களுடன் புதிய இன்னிங்ஸை ஆரம்பிக்கும் கூகுள்!

click me!