கோவையில் உள்ள போதை மீட்பு மையத்தில் அனுமதிக்கப் பட்டிருந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரைச் சேர்ந்த அரசு மருத்துவர் பிச்சைமுத்துவின் மகன் கிஷோர். இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ., படித்து வந்தார். இதனிடையே கிஷோர் போதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை நல்வழிபடுத்தும் நோக்கத்தில், கோவில்பாளையத்தில் உள்ள ஹெல்பிங் ஹேண்ட்ஸ் என்ற போதை மீட்பு மையத்தில் சேர்த்துள்ளனர்.
சென்னையில் மீண்டும் பிரதமர் மோடியின் பிரமாண்ட ரோட் ஷோ; அண்ணாமலை அறிவிப்பு
தொடர்ந்து மீட்பு மையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மாணவர் கிஷோர் வீட்டிற்கு செல்வதாகக் கூறி அடம்பிடித்துக் கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மீட்பு மைய ஊழியர்கள் கிஷோரின் கை, கால்களைக் கட்டி அவரின் வாயில் துணி வைத்து அடைத்துள்ளனர். இதனால் மாணவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மையத்தின் வார்டன் அரவிந்த் ஹரி, உளவியல் மருத்துவர் ஜவ பிரசன்னா ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.