அதிமுக வெற்றி பெற்றால் கோவை மீண்டும் தொழில் நகரமாகும்; சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக பிரேமலதா பிரசாரம்

By Velmurugan s  |  First Published Mar 29, 2024, 2:28 PM IST

மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி காரணமாக ஏராளமான பஞ்சாலைகள், சிறு,குறு ஆலைகள் மூடப்பட்டதாக கோவையில் நடைபெற்ற பிரச்சாரத்தின் பொழுது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.


கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது  சிறந்த மாநகராட்சி என்றால் அது கோவை மாநகராட்சிதான். எப்போதும் சுத்தமாக இருக்கும். இந்த பகுதியில்  ஏராளமான ஆலைகள் மற்றும் என்டிசி மில்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. 

ஆலைகள்  மூடப்பட்டதால் வேலைவாய்ப்பு கேள்வி குறியாகி இருக்கின்றது. இதற்கு  யார் காரணம்? திமுகவினரும், அவர்களது பினாமிகளும் மூடப்பட்ட ஆலைகளை வாங்கி கட்டிடங்களாக மாற்றி வருகின்றனர். மோடி ஆட்சியில், ஜிஎஸ்டி வந்த பின் ஏராளமான ஆலைகள் மூடப்பட்டுள்ளன. தொழில்கள் முடங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். 300 சதவீத மின்கட்டண உயர்வினால்  தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

“20 வருசமா ரோடு சரியில்ல” பிரசாரத்தின் போது கேட்ட ஒற்றை கேள்வி; கடுப்பாகி பாதியில் கிளம்பிய தங்க தமிழ்செல்வன்

சிங்கை ராமசந்திரன் வெற்றி பெற்றால் மீண்டும் கோவையை தொழில் நகராமாக மாற்றுவார். சிங்காநல்லூர் பகுதியில் 20 நாட்களுக்கு  ஒரு முறை தண்ணீர் வருகின்றது. குடிதண்ணீர் இல்லை என்பது உள்ளங்கை நெல்லி கனியாக தெரிகின்றது. அனைத்து சாலைகளுமே குண்டும் குழியுமாக இருக்கின்றது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நாங்கள் நிறைவேற்றுவோம். 

மத்திய அரசும், மாநில அரசும் கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்ற வில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை இருக்கின்றது. டாஸ்மாக் கடைகள் பெருகி இருக்கின்றது. இந்த நிலைமாற வேண்டும் என்றால் சிங்கை ராமச்சந்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். 

வங்கி கணக்கில் 0 பேலன்ஸ்... குண்டுமணி தங்கம் கூட இல்லை- திருமாவளவனின் சொத்து பட்டியலில் வெளியான ஷாக் தகவல்

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பாக தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பேருந்துகள் சாலையில் நின்றன. பிரச்சாரம் காரணமாக  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து போலீசார் நெரிசலை சரிசெய்தனர்.

click me!