கேரளா மாநிலம் மலப்புரத்தில் இருந்து சென்னைக்கு மினி லாரியில் கடத்தப்பட்ட சந்தன மரங்களை வனத்துறை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தனர்.
கேரளா மாநிலம், மலப்புரத்தில் இருந்து சென்னை சென்ற மினி லாரியை கோவை போத்தனூர் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்ற போது லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த லாரியை பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற காவல் துறையினர் சிறிது தூரம் சென்று மடக்கிப் பிடித்தனர்.
நிற்காமல் சென்றது குறித்து லாரி ஓட்டுநர் மனோஜிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் தூக்க கலக்கத்தில் இருந்ததால் நீங்கள் லாரியை நிறுத்தியது தெரியவில்லை என்றும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். மேலும் அந்த லாரியில் விறகு கட்டைகள் இருப்பதாக கூறி உள்ளார்.
சந்தேகம் அடைந்த காவல் துறையினர் பின்னர் அந்த லாரியில் சோதனை செய்தனர். அதில் ரகசிய அறை அமைத்து சந்தன கட்டைகள் மறைத்து வைத்து கடத்திச் சென்றது கண்டுபிடித்தனர். பின்னர் இது குறித்து வனத் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்து லாரியை பறிமுதல் செய்த வனத்துறையினர் வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் கொண்டு சென்று சோதனை செய்ததில் ஒரு டன் சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், ஓட்டுநர் மனோஜ்யிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புண்ணிய ஸ்தலத்தில் பொய் சொல்லும் அமித் ஷா நிச்சயம் தோற்பார் - விவசாய சங்க தலைவர் சாபம்