மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோவையில் பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மணிப்பூரை சேர்ந்த இரு பழங்குடியின பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் AITUC சங்கங்கள், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், இந்திய கலாசார நட்புறவு கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாஜக அரசிற்கு எதிராகவும், மணிப்பூரில் அரங்கேறிய பெண்கள் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
தமிழகத்தில் இந்த 6 அமைச்சர்கள் மீது நடவடிக்கை எழுத்தால் ஊழல் ஒழியும் - அண்ணாமலை கருத்து
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பழங்குடியின மக்கள் மணிப்பூர் சம்பவத்தை கண்டிக்கும் வகையில் அவர்களது பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தும், நடனமாடியும் கண்டனங்களை பதிவு செய்தனர். இது குறித்து பேசிய சிபிஐ மாநில பொருளாளர் ஆறுமுகம், அகில இந்திய தலைமை அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிக்கும் போது கோவை மாவட்டத்தில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். மேலும் ஒன்றிய அரசு மணிப்பூரில் அமைதி நிலவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கர்நாடகாவில் கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவிகள்; பரபரப்பான சிசிடிவி காட்சிகள்