கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே பூட்டியிருந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தை திருடிச் சென்ற பெண்களை காவல் துறையினர் சிசிடிவி உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பகுதியில் வசிப்பவர் சதாசிவம். ஆவின் பால் முகவரான இவர் கடந்த 22ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் தனது பணிகளுக்காக வெளியே சென்று உள்ளார். அவரது மனைவி மற்றும் மகன்களும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால் கடைசியாக வீட்டில் இருந்து வெளியே சென்ற சதாசிவத்தின் மகன் வீட்டை பூட்டி வழக்கம் போல் வீட்டின் முன்பு உள்ள பெட்டியில் சாவியை வைத்துவிட்டு அவரும் வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சதாசிவம் மாலை வீட்டிற்கு வந்தவர் ஆவின் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு வைத்து இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை எடுக்க பீரோவை திறந்து உள்ளார். அப்போது அவர் வைத்த இடத்தில் பணம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு உள்ளார். யாரும் எடுக்கவில்லை என்றதும், பீரோவை சோதித்து பார்த்ததில் லாக்கரில் வைத்து இருந்த 15 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உள்ளார்கள். அதில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த இரண்டு பெண்களை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து தனி தனியே விசாரித்ததில் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்து உள்ளனர். மேலும் காவல் துறையினரின் விசாரணையில் ஒருவர் பெயர் ரமணி, மற்றொருவர் வினையா என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது கரூர், காங்கேயம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதும் தெரியவந்து.
மேலும் விசாரணையில் சதாசிவத்தின் வீட்டில் நகையை கொள்ளை அடித்ததும், கொள்ளை அடிப்பதற்க்காக தனியார் கால்டாக்ஸி மூலம் கோவை வந்ததாகவும் தெரிவித்து உள்ளனர். வீட்டில் ரமணி நகையை திருடியதும். திருடிய நகைகளை வினயா, ரமணி இருவரும் சரிபாதியாக பிரித்து எடுத்து உள்ளனர்.
அடுக்கடுக்காக கேள்வி கேட்ட அமைச்சர் பொன்முடியை ஒரே பதிலில் வாயடைக்க வைத்த மூதாட்டி
இதில் வினயா 14 கிராம் நகையை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல நடைகடையில் தனது அடையாள அட்டையை காண்பித்து விற்று உள்ளது தெரியவந்தது. இதை அடுத்து நகைகடைகாரர்களிடம் விற்கப்பட்ட 14 கிராம் நகை உட்பட திருட்டுபோன 15 சவரன் தங்க நகைகளையும் கைப்பற்றிய சிங்கநல்லூர் காவல் துறையினர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.