இந்தியாவிலேயே தமிழகம் தான் நம்பர் 1.. சுற்றுலாத்துறையில் தமிழகம் சாதனை - அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

By Raghupati RFirst Published Jan 14, 2023, 10:22 PM IST
Highlights

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 12 கோடி பேர் வருகை தந்துள்ளனர். எனவே தமிழகம் தான் இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் முதல் இடத்தில் உள்ளது. - சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ‘ தமிழகத்தை முதலில் கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஒவ்வொரு துறைக்கும் தனி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். சுற்றுலாத்துறை என்பது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதமாக திகழ்கிறது. இதற்கு முக்கியமான காரணம் கோவில்கள் தான் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. பயணிகள் தமிழகத்திற்கு அதிகமாக வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் 12 லட்சத்து ஐம்பதாயிரம் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளனர்.

இதையும் படிங்க..Pongal 2023: வாடிவாசலில் சீற தயாராகும் காளைகள்! ஜல்லிக்கட்டு போட்டி எந்தெந்த தேதிகளில் எங்கு நடக்கிறது?

அவர்களின் இங்குள்ள கோவில்கள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று பாரம்பரிய கலைநயத்தை ஆர்வத்தோடு கண்டு களித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 12 கோடி பேர் வருகை தந்துள்ளனர். எனவே தமிழகம் தான் இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் முதல் இடத்தில் உள்ளது.

நான் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றுலாத்துறை சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றேன். கோவை மாவட்டத்தில் பொழுதுபோக்கு  இடமில்லை இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

சென்னையில் படகு இல்லம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மேம்பாடு குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம். அதேபோல ஊட்டியில் உள்ள படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலா தலங்களில் கூடுதல் வசதிகள் செய்து மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் என்ன ? மற்றும் மேம்பாடுகள் என்ன ? என்பது குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சுற்றுலாத் துறையில் மேம்பாடு அடைய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க..கடைசியாக கடவுளை சந்தித்துவிட்டேன்.! நெகிழ்ந்த எஸ்.எஸ் ராஜமௌலி.. யார் தெரியுமா அது.?

click me!