கோவை கார் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை கார் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவையில் இன்று அதிகாலை 4.10 மணிக்கு கார் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த கார் 2 துண்டாக உடைந்தது. மேலும் கார் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவ எதிரொலி... சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!!
undefined
மேலும் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்ட உக்கடம் போலீஸார், உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து மேற்கொண்ட விசாரணையில், கார் சென்னை பதிவெண்ணை கொண்டு இருந்ததும் கார் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நபர் யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: கோவையில் வெடித்தது யாருடைய கார்.? இறந்த மர்ம நபர் யார்..? சதியா..? விபத்தா..? திணறும் போலீஸ்...!
அதில், கார் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர் உக்கடத்தைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பது தெரியவந்துள்ளது. அவர் என்.ஐ.ஏ ரேடாரின் கீழ் இருந்தார் மற்றும் ISIS உடனான சந்தேகத்திற்குரிய தொடர்புக்காக 2019 இல் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். பின்னர் ஐ.எஸ்.எஸ். உடனான அவரது தொடர்பை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லாததால், அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.