கோவை கார் வெடிப்பு சம்பவ எதிரொலி... சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!!

கோவையில் காரில் இருந்த சிலிண்டா் வெடித்து ஒருவா் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

chennai airport is under 5 layer security after coimbatore cylinder blast in car

கோவையில் காரில் இருந்த சிலிண்டா் வெடித்து ஒருவா் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக கோவையில் காரில் எடுத்து சென்ற 2 சிலிண்டர்களில் ஒரு சிலிண்டா் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் வந்த நபர் உயிரிழந்தாா். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதையும் படிங்க: வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பட்டாசு - களம் இறங்கிய மதுரையான்ஸ்.!

chennai airport is under 5 layer security after coimbatore cylinder blast in car

மேலும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள் உள்ளிட்டவை இருந்துள்ளது. இதை அடுத்து இந்த வெடி விபத்தில், வாகனத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதா? பின்னணியில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை விமானநிலையத்தின் பாதுகாப்பு 3 அடுக்கிலிருந்து 5 அடுக்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுகவின் உட்கட்சிப் பிரச்னை நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது... ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!!

chennai airport is under 5 layer security after coimbatore cylinder blast in car

சென்னை விமானநிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களையும் கண்காணித்து, சந்தேகப்படும் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் கூடுதலாக வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய்களுடன் வரவழைக்கப்பட்டு, பயணிகளின் உடமைகள், காா் பாா்க்கிங் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி ரயில் நிலையம், பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios