ரேஷன் கடையை தும்சம் செய்த காட்டு யானைகள் கூட்டம்.. அரிசி மூட்டைகளும் சூறை.. அதிர்ச்சி வீடியோ..!

Published : Oct 22, 2022, 08:33 AM ISTUpdated : Oct 22, 2022, 08:57 AM IST
ரேஷன் கடையை தும்சம் செய்த காட்டு யானைகள் கூட்டம்.. அரிசி மூட்டைகளும் சூறை.. அதிர்ச்சி வீடியோ..!

சுருக்கம்

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த தாயமுடி எம்.டி. பகுதியில் இயங்கி வரும் துளசி மகளிர் சுய உதவி குழு நியாய விலை கடையை நள்ளிரவு 2 மணி அளவில் அப்பகுதியில் ரேஷன் கடையை உடைத்து அதில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டையை இழுத்து சூறையாடியது.

வால்பாறை எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை காட்டு யானைகள் உடைத்து  அரிசி மூட்டையை இழுத்து சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த தாயமுடி எம்.டி. பகுதியில் இயங்கி வரும் துளசி மகளிர் சுய உதவி குழு நியாய விலை கடையை நள்ளிரவு 2 மணி அளவில் அப்பகுதியில் ரேஷன் கடையை உடைத்து அதில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டையை இழுத்து சூறையாடியது.

இதையும் படிங்க;- தீபாவளியை முன்னிட்டு கலைக்கட்டும் மது விற்பனை... அதிக விலைக்கு விற்பதாக மதுபிரியர்கள் குற்றச்சாட்டு!!

இதன் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் வந்து பார்த்தபோது அங்கு 13க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடையை உடைத்து சேதப்படுத்தியது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக உடனடியாக அப்பகுதியில் உள்ள மக்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சத்தமிட்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டி அடித்தனர். 

இதனால் மீதமுள்ள அரிசி மூட்டைகள் தப்பியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது எனவே இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

இதையும் படிங்க;- நெஞ்சை உலுக்கும் கோர விபத்து.. புளிய மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணியும், தாயும் பலி.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?